க - வரிசை 112 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
குரவர்

அரசன்
ஆசிரியன்
தந்தை
தாய்
மூத்தோன் (தமையன்)

குற்ற வகை

பசி
தாகம்
அச்சம்
சினம்
வெறுப்பு
பிரியம்
மோகம்
நீண்ட சிந்தனை
நரை
நோய்
அழிவு
வியர்வு
இளைப்பு
மதம் பிடித்தல்
இரத்தல்
அதிசயம்
பிறப்பு
உறக்கம்

கடை வள்ளல்

பாரி
மலையமான் திருமுடிக்காரி
வல்வில் ஓரி
ஆய் அண்டிரன்
பேகன்
எழினி
நள்ளி

கூ

பூமி
கூவுதல்

காத்து கருப்பு

காற்று கருப்பு - (கருநிற வாயு)காபனீர்ஓட்சைட்டை இவ்வாறு அழைப்பார்கள்

கடோரம்

கடினம்
கொடுமை; கடூரம்

காலதர்

கால் =காற்று, அதர் = வழி. காற்றுக்கான வழி எனப்பொருள்படும் ஜன்னலுக்கான அழகான தமிழ்ச்சொல். பலகணி, சாளரம் என்பவை ஒத்த சொற்கள்.

குறங்கு

மனிதர்களின் தொடைப் பகுதி.

கடையான்

கப்பல், படகு, வள்ளம் போன்றவற்றின் கடைப்பகுதி அல்லது பின்பகுதி.

கொழுந்தன்

கணவனின் தம்பி
கணவனுடன் பிறந்தவன்

கொழுந்தியாள்

கணவனின் பெண் உடன்பிறப்பு

குல்லம்

இது முறம் அல்லது சுளகு என்பதற்குப் பதிலாக வயல் நிலத்தில் உழவர்களாற் பயன்படுத்தப்படும்

கொசுவம்

பெண்கள் சேலை கட்டும்போது விரல்களின் உதவியோடு சேலையின் நடுப்பகுதியை சிறு சிறு மடிப்புகளாக்கி இடுப்பில் சொருகிக் கொள்வர். இது அழகாகவும் நடப்பதற்கு இலகுவாகவும் இருக்கும். இதனைக் கொசுவம் என்றும் கொய்யகம் என்றும் அழைப்பர். பண்டை நாட்களில் இது பின்புறமாக அமைந்தபோதிலும் இன்றைய பெண்கள் முன்புறத்தில் கொசுவம் அமைவதையே விரும்புகிறார்கள்.

காணொளி

நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்
நிகழ்படம்
வாரொளியம்
ஒளிதம்
பதிவொளி

கங்கை

வட இந்தியாவில் ஓடும் ஒரு வற்றாத பெரு நதி

காசாளர்

(வங்கியில்) பணம் கொடுக்கல்/வாங்கல் செய்பவர்

கள்ளம்

கள்ளத்தனம், திருட்டுத்தனம், வஞ்சனை

காட்டுக்கோழி

காட்டில் காணப்படும் ஒருவகை கோழி இனம்

காட்டுப்பன்றி

வீட்டில் வளர்க்கப்படும் பன்றி இனம் போன்றது ஆனால் மிகவும் கொடூரமானது முகத்தில் இரு கோரை பற்கள் காணப்படும். கருப்பு நிறமுடையது; மூர்க்க குணமுடையது

கோரை

ஒருவகைப் புல்