க - வரிசை 111 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடியன் | கடியவன் |
குறிப்பயஞ்சில்லியல் | மின்னியல் தொடர்புடையது |
கனி | பழம் |
கணிதவியல் | கணிதம் |
கணக்கியல் | நிதியியல் |
குறிகையியல் | சமிக்கைகள் தொடர்புடைய |
கைமா | யானை |
கலபம் | யானை |
கிஞ்சித்தேனும் | சிறிதும்; கிஞ்சித்தேனும் இரக்கமில்லாதவன் |
கிஞ்சிதம் | கிஞ்சித்து |
கொஞ்சங்கொஞ்சமாய் | சிறிது சிறிதாய் |
கள்ளன் | பிறர் பொருட்களை அவருக்கு தெரியாமல் கவர்ந்து கொள்பவன். |
கனியாளன் | இனியவன் |
கலைஞன் | கலைகளில் சிறந்தவன் |
கணேசுரர் | நந்தி |
கரணம் | மனம்,வாக்கு,காயம் (உடல்) |
கருமேந்திரியம் | வாக்கு |
கிரகசமித்து | எருக்கு |
கிரகதான்யம் | கோதுமை |
கிரிகள் | இமயம் |