க - வரிசை 108 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கிண்ணம் | சிறுவட்டில் |
கட்கண் | அங்கங்கே |
கட்டடங்க | முழுதும் |
கட்டோடு | முழதும் |
கடிதில் | கடிது |
கடுக | கடிதில் |
கடுகென | விரைவாக |
கடையுற | முழுதும் |
கண்டமட்டும் | மிகுதியாய் |
கமலகுண்டலமாய் | தலைகீழாய் |
காலங்காட்டி | காலங்காட்டிலும் |
காலங்காட்டிலும் | விடியற்காலையில் |
காலமேகாட்டியும் | அதிகாலையில் |
கிட்டமுட்ட | ஏறக்குறைய |
கிட்டிமுட்டி | மிகநெருக்கமாக |
குண்டுங்குழியுமாய் | மேடும்பள்ளமுமாய் |
குருட்டடியாய் | தற்செயலாய் |
குருட்டுப்போக்காய் | தற்செயலாய் |
குருட்டுவாக்கில் | தற்செயலாய் |
குலையோடே | முழுதும் கொத்தோடே குலையோடே |