க - வரிசை 107 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கைத்திறம் | திறமை |
குரள்வளை | வளைந்த குரல் தோன்றும் தொண்டைப் பகுதி |
கலை | நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது |
குருகு | கூழைக்கடா |
கண்மாய் | மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை. |
கேணி | கிணறு |
கூரை | வீடு, கட்டிடம் முதலியவற்றின் மோடு |
குறில் | குறுகிய ஓசை சொல் |
கொடுந்தமிழ் | வட்டாரத் தமிழ் மொழி |
கால | காலை |
கொள்ளுங்க | கொள்ளுங்கள் |
கொடுத்துடுவாரு | கொடுத்து விடுவார் |
காப்பாத்துங்க | காப்பாற்றுங்கள் |
கவண் | ஒரு வகை ஆயுதம் |
கவனக்குறைவு | கவனமின்மை |
குருடன் | கண் தெரியாதவன் |
கட்டுறவி | கட்டெறும்பு |
குடம் | பானை |
கலம் | கலன் |
கிட்டி | கிட்டிக் கோல் |