க - வரிசை 105 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கெழுமுதல்

காமவிகாரங்கொள்ளுதல்

கரிக்குருவிவகை

வாலாட்டிக்குருவி

கோகிலம்

குயில்

களகண்டம்

குயில்

கொண்டைக்கரிச்சான்

உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை

குருவி

குறு-மை
பறவைவகை. குருவிசேர் வரை(சீவக. 2237)

கின்னகம்

தூக்கணங்குருவி

குறியீடு

எழுத்துக்கு பதிலாக பயன் படுத்தும் சின்னம்

குழவி

குழந்தை
சிறு வண்டு
அம்மியில் அரைக்க பயன்படுத்தும் ஒரு சாதனம்

கொங்கை

பெண்ணின் மார்பகம், முலை
மரத்தின் முருடு
கம்புத் தானியத்தின் உமி
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப்பதிகாரம் 4, 49)
கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால் (நளவெண்பா)

கண்ணி

வலை

கச்சணிந்த

அழகிய
பெரிய

கோட்பாடு

கரு
இயக்க விதி

குழந்தை

வயதில் மிகவும் சிறியவர்

கண்ணன்

ஒரு கடவுள்
லீலைகளின் மன்னன

கங்கானி

ஒரு குழுவின் தலைவன் அ பெரியவன்

கணையம்

இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி
அரசனது காவலில் உள்ள காடு; புரவுக்காடு, மிளை, அரண்; தற்காலத்தில் இயற்கையைக் காக்கும் முகமாக அரசுகளால் காப்பில் இருக்கும் காடு

கதாகாலட்சேபம்

(கோயில்களில்)இசைப்பாடல்கள் பாடிப் புராண, பக்திக் கதைகளை கூறி நிகழ்த்தும் சொற்பொழிவு

குபேர மூலை

தென்மேற்கு

கடாகம்

அண்டகோளகை