க - வரிசை 103 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கெட்டது | தப்ப |
கவர்ச்சி | நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் கன்னிகள் |
கக்கவைத்தல் | உண்மையைக் கூறவைத்தல் |
கங்குகரையின்றி | எல்லையற்ற (அ) அளவில்லாத |
கங்கணம் கட்டுதல் | ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி எடுத்துக் |
கடன் கழித்தல் | விருப்பமின்றி ஒரு காரியத்தைச் செய்தல் |
கடைவிரித்தல் | பிறர் பார்க்கும் வகையில் செய்தல் |
கண்ணாயிருத்தல் | குறியாக இருத்தல் |
கண்ணெடுத்துப் பார்த்தல் | அக்கரையுடனும் பரிவுடனும் கவனித்துச் |
கண்வளர்தல் | உறங்குதல் |
கம்பி நீட்டுதல் | பிறரின் கவனத்திலிருந்து நழுவுதல் |
கயிறு விடுதல் | கற்பனை கலந்து பேசுதல் |
கருவறுத்தல் | அடியோடு அழித்தல் |
கரைபுரளுதல் | அளவின்றி வருதல், அளவு கடந்து வெளிப்படுதல் |
கழித்துக்கட்டுதல் | ஒத்துவராது என்று ஒதுக்குதல் |
காற்றாய்ப் பறத்தல் | மிக வேகமாய் வருதல் |
கைஓங்குதல் | செல்வாக்குமிகுதல் |
கைச்சரக்கு | சொந்தக்கற்பனை |
கைதவறுதல் | உண்மையில் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் |
கொட்டியளத்தல் | அளவிற்கு அதிகமாகப் பேசுதல் |