க - வரிசை 102 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கிடந்தகிடையாய் | வியாதியால் படுத்தபடுக்கையாய் |
கின்னரகண்டி | சின்னரகீதம். (பெருங். பக் 824, அரும்.) (Loc.) |
கொண்ட | ஓர் உவமவாசகம். யாழ் கொண்ட விமிழிசை (கலித். 29, 17) |
கொண்டங்கட்டிப்பாய்ச்சு | அணைகட்டி மேட்டுநிலத்தில் நீர்பாய்ச்சுதல். (Loc.) |
கதம் | கோபம் |
கதிப்பொருத்தம் | ஐ உ எ ச ட த ப தெய்கதி, அ ஈ ஊ ஏ ந ண ந ம மக்கட்கதி, ஒ ஓ யரல ழ ற விலங்குகதி, ஜ ஒஉ வ ள ன நரககதி செய்யுண்ண்முதன்மொழிப் பொருத்தங்களுள் ஒன்று. (வெண்பாய், முதன்18, |
கர்மிகள் | தொழிலாளிகள். (Insc.) |
கரப்பிரசாரம் | ஒரு வகை அபி்நயம். சீர்சால் கரப்பிரசார முவமையில் சிரக்கரகருமம் (திருவிளை. கான்மா. 8) |
கழா அல | கழற்ற. முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண்.148). |
கா | ஓர் அசைச்சொல் |
கீலகம் | தந்திரம். கீலமறிந்து பேசுகிறவன். (சங். அக.) |
கேசாதிபாதம் | கலிவெண்பாவால் ஒருவரை முடிமுதலாக அடிவரை வருணித்துக்கூறும் ஒரு பிரபந்தம். (இலக். வி. 871) |
கச்சம் | வார் |
கீழ்ப்படி | இணங்கு |
கணம் | 100000000000 |
கணம் | தேவர் |
கற்பம் | 1000000000000 |
குணம் | சத்துவம் |
கொடிவேலி | அதிகற்றாதி |
கொள்ளைக்காரன் | ஆயுதம் கொண்டு கொள்ளை அடிப்பவன், ஆயுதக்கூட்டத்தை சேர்ந்தவன் |