க - வரிசை 101 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
காய்த்த

ஓர் உவமவாய்பாடு. வெயிலொளி காய்த்த விளங்குமணி (தொல். பொ.291, உரை).

காரம்

ஆகாரம் என்றாற்போல எழுத்தோடு சேர்ந்துவரும் சாரியைகளில் ஒன்று. (நன். 126.)
ஒலிக்குறிப்போடு சேர்ந்துவரும் ஒரு சாரியை.

காரன்

வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி.

காரி

வேலைக்காரி பணக்காரி என்பவற்றிற்போல வினைமுதல் உடைமைமுதலிய பொருளில்வரும் ஒரு பெண்பாற்பெயர் விகுதி.

கான்

A particle used to facilitte the pronunciation of letters in Tamil, as in அஃகான்
எழுத்துச் சாரியைகளில் ஒன்று. (தொல். எழுத்.134.)

கில்

ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வருகிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229, 2).

கில

எதிர்பார்த்தல் முதலிய பொருளை யுணர்த்தும் வடமொழி யிடைச் சொல். சுவாகதங் கிலவென்று (திருவிளை. இரசவாத. 15).

கிறு

ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.)

கின்று

ஒரு விளையெச்சவிகுதி. (ஆராய்ச்சித். பக் 305.)
ஓர் அசைநிலை. கின்று நின்றசைநிலை (நன். 441)
(Gram.) Sign of the present tense, as in செய்கின்றது
ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.)

கு

Sign of the dative case
நான்கனுருபு. (தொல். சொல். 76.)
Connective particle, as in அறிகுவேன்
ஒருசாரியை. (கலித். 79, 18.)
Suffix added to verbs, nouns, etc., to form
(A) abstract nouns, as நன்கு
பண்புப்பெயர்வகுதி:
(b) verbal nouns, as போக்கு
தொழிற்பெயர்விகுதி:
(c) finite verbs in 1st (pers. sing. fut.), as உண்கு
த்ன்மையொருமை எதிர்கால வினைமுற்றுவிகுதி.

குரை

ஓர் அசைநிலை. (தொல். சொல். 274.)
இசைநிறை. (தொல். சொல். 274.)

குரைய

ஓர் அசைநிலை. கெடலருங் குரைய கொற்றம் (சீவக. 1914).

கெழுவ

ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.)

கோள்

முன்னிலைப் பன்மை விகுதி. புறப்பற்றுத் தள்ளுங்கோள் (அஸ்டப், நூற்றேட். 58).

காட்டியும்

காட்டிலும். என்னைக் காட்டியு முண்டோ (குருகூர்ப். 96).

காய்ப்ப

ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286.)

கடைத்தும்

ஒரு வினையெச்சவிகுதி. பலநல்ல கற்றக்கடைத்தும் (குறள், 823).

கண்டை

சரிகைக் கரை
ஓர் அசைநிலை. (தொல். சொல், 426.)
கண்டைப்பாய். (கலித். 103, 3.)

கண்டைப்பாய்

பார் இப்போர் புறஞ்சாய்ந்து கண்டைப்பாய் (கலித். 89, 13)

காளகண்டம்

குயில்