க - வரிசை 100 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
காந்திமான் | (fem. காந்திமதி) |
கூனை | நிர்ச்சால் |
கூகிள் | தேடல் இயந்திரம் அ பொறி |
குரல்வளை | பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும் |
கொற்றவை | போரின் கடவுள் |
கைவிலங்கு | கைது செய்யப்படும் ஒருவரது கைகளைக் கட்டப் பயன்படும் சங்கிலி |
கூறு | புத்தி |
கூறு | சொல்லு |
கொல் | கொல்லு (கொல்ல, கொன்னு) |
கல்வி | படிப்பு |
கண்டாய் | ஒரு முன்னிலை அசைச்சொல். (திருக்கோ.114, உரை.) |
கண்டீர் | ஒரு முன்னிலையசை. அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே (தேவா. 1231, 10). |
கண்டீரே | கண்டீர். (தொல், சொல்.425.) |
கிடாய் | ஒரு வியக்கொள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொகைலை. பா. 21). |
கிடிகோள் | காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைய்ப்பன்மை உரையசை. இழக்கவேண்ட கிடிகோள் (ஈடு, 5, 1, 7, ) |
கிடீர் | கிடிகோள். வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் (ஈடு, 1, 5, அவ.). |
கொண்டு | முதல். அடியிற்கொண்டு முடிகாறும் (இறை. 3, 45) |
கரம் | ஓர் எழுத்துச் சாரியை. (நன். 126.) |
காணும் | முன்னிலைப் பன்மையில்வரும் ஓர் அசை. இக்குடிப்பிறந்தோர்க் கெண்மை காணும் (புறநா. 43) |
காத்தை | ஓர் அசைநிலை (தொல், சொல் 426, உரை.) |