ஓ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஓரிரு | மிகவும் குறைவான : சில. |
ஓமம் | அசமதாகம் |
ஓட்டை | ஓடுப்பொருளையுணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமை யுருபு. பர்வத பரமாணு வோட்டை வாசிபோரும் (திவ். திருப்பா. அவ.) |
ஓடம் | படகு |
ஓடு | கால்களை வேகமாக அசைத்து நகர்வது. |
ஓசை | அதிக அளவுடன் ஒலிக்கும் ஒலி |
ஓட | உவமையுருபு. (தொல். பொ. 290.) |
ஓம் | தன்மைப்பன்மைவிகுதி. (நன். 140.) |
ஓரும் | ஓர் அசைச்சொல். (குறள், 40.) |
ஓனம் | எழுத்தின்சாரியை. (தொல். எழுத், 134, உரை.) |
ஓரை | ஓர் இடைச்சொல். (பிங்.) |
ஓல் | ஒரு விளியுருபு. சாத்தாவோல் (வீரசோ. வேற்றுமைப். 8, உரை). |
ஓட்டைக்கையன் | பணத்தைத் தாராளமாகச் செலவு செய்து விடும் |
ஓகம் | ஓகக் கலை |
ஓடை | ஊட்டம் |
ஓரெழுத்தொருமொழி | ஒரெழுத்து நின்று ஒரு பொருளை உணர்த்துவது |
ஓணம் | மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் துவக்கம் தான் இந்த திரு ஓணம் தினமாகும் |
ஓலைப்பை | a basket made of palmyra leaves like a bag and used by fishermen |
ஓரடிக்கோரடி | அடிக்கடி |
ஓங்காரன் | பிள்ளையார் |