ஓ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஓத்துமுறைவைப்பு

ஒருயுக்தி.

ஓமப்பொடி

திருநீறு.

ஓமமண்டபம்

ஓமாலயம்.

ஓமவிறகு

சமிதை.

ஓமாக்கினி

ஓமத்தீ.

ஓமிடித்தல்

கேடுறல்.

ஓமுடிவு

அழிவு.

ஓமக்கொட்டை

மாங்கொட்டை.

ஓம்படல்

காவல், கையடை.

ஓய்வுகரை

அளவுமுடிவு.

ஓர்பட்சம்

ஓரவாரம்.

ஓரம்பேசல்

ஒருபக்கஞ் சாயப்பேசல்.

ஓரவாரம்

ஒருபக்கவாரம்.

ஓரோசிடைநேரிசைவெண்பா

ஓராசிடையிட்டுவரும் வெண்பா.

ஓரிதழ்த்தாமரை

ஒருபூடு
சூரியகாந்தி

ஓரிலைத்தாமரை

ஒரு பூடு.

ஓரோவழி

ஒருசார்.

ஓர்கட்புள்

காகம்.

ஓர்ச்சி

ஆராய்ச்சி,ஆலோசனை.

ஓர்வு

ஆராய்வு.