ஓ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஓங்காரித்தல் | உறுக்குதல். |
ஓசையுடைமை | நூலழகினொன்று. |
ஓடதிபதி | சந்திரன் |
ஓஷதியம் | கொடிகள். |
ஓஷதீசன் | சந்திரன். |
ஓடவைத்தல் | புடமிடுதல். |
ஓடன் | ஆமை. |
ஓடுவிப்புருதி | ஒரு சிலந்தி. |
ஓட்டபல்லவம் | மேலுதடு. |
ஓஷ்டம் | உதடு, மேலுதடு. |
ஓட்டாங்கட்டி | உடைத்த ஒட்டுத்துண்டு. |
ஓட்டாங்கிளிஞ்சல் | ஒருமீன். |
ஓட்டாங்குச்சு | கலவோடு. |
ஓட்டாம்பாரை | ஒருமீன். |
ஓஷ்டி | கோவைக்கனி. |
ஓட்டுதல் | ஓட்டல். |
ஓதக்கால் | பெருங்கால். |
ஓதிமமுயர்ந்தோன் | பிரமன். |
ஓதுவார்க்குணவிடுதல் | அறமுப்பத்திரண்டினொன்று. |
ஓதைவாரி | இறகு. |