ஓ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஓ | இரக்கம் இவற்றைக் காட்டிடுமோ ருபசருக்கம் அசைநிலை உ-ம் வம்மினோ, அதிசயவிரக்கச்சொல் |
ஓ | மதகுநீர் தாங்கும் பலகை |
ஓகை | உவகை. |
ஓகோ | அதிசயம் முதலிய மனநிலை காட்டுஞ் சொல். ஓகோ வுனைப்பிரிந்தார் (தாயு. பராபரக். 30). |
ஓக்காளம் | ஓங்காளம். |
ஓங்காரி | சத்தி. |
ஓங்கில் | ஒருமீன். |
ஓடல் | அச்சக்குறிப்பு, ஓடுதல். |
ஓடியம் | சபைக்கடாப்பேச்சு, பரிகாசம். |
ஓடியவோடம் | கிளிஞ்சில். |
ஓட்டு | செலுத்து |
ஓட்டுத்துத்தி | ஒருபூடு. |
ஓணான் | ஓணான் பல்லி வகையை சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது. |
ஓது | பூனை |
ஓத்தி | ஓந்தி. |
ஓந்தி | ஓணான். |
ஓமிடி | துக்கம். |
ஓய்ப்பிடியாள் | ஒரகத்தி. |
ஓரா | ஒட்டி, ஒருமீன். |
ஓராட்டு | தாலாட்டு. |