ஒ - வரிசை 14 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒப்பேறு

(ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல்

ஒயாமல்

தொடர்ந்து செய்தல்
இடைவிடாது செய்தல்

ஒயில்

அழகிய தோற்றம் அல்லது நடை
ஒரு வகைக் கூத்து

ஒருங்கமை

ஒன்றுசேர்த்தல்

ஒருவழிப்பாதை

ஒரு பக்கமாக செல்லும் பாதை
சிறு பாதை
ஒற்றையடிப் பாதை

ஒருப்படு

உடன்படிதல்

ஒருவு

விட்டு நீங்கு
ஒத்திரு
தப்பிச் செல்
தவிர்
ஆடு

ஒரேமூச்சாக

ஒரே தடவையில் செய்து முடித்தல்
ஒரே முறையில்

ஒல்லு

செய்யக்கூடியதாகு
உடன்படு
தக்கதாகு;பொருந்து
நிகழ்தல் செய்
பொறுத்தல் செய்

ஒளிதம்

காணொளி

ஒருங்குறி

எழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்

ஒலிப்பெயர்வு

ஒலியின் அசைவு அல்லது நகர்வு

ஒழி

அழி; ஓர் துணை வினை

ஒப்பாரி

ஒப்பாரி என்பது இழப்புக்காக அல்லது இறந்தோருக்காக உற்றார், உறவினர் புலம்பி பாடும் பாடல் ஆகும்.
இழப்புப் பாடல்கள், ஒப்பு, விண்ணாலம், அழுகாச்சி என்ற சொற்களாலும் அழைக்கப்படும். ஒப்பாரி என்பது வாய்மொழி வழக்காற்று வகைமைகளில் ஒன்றாகும்.