ஒ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஒள் | பிரகாசமான |
ஒத்துக்கொள் | சம்மதித்தல் |
ஒருகாலே | ஒரேமுறையில். ஒருகாலே யெல்லாம் வாங்குக. |
ஒருங்கு | முழுதும். தூணிப்பதககென் றொருங்கொப்பக் கொண்டானாம் (நாலடி, 387). ஏககாலத்தில். முழுமை. (திவா.) |
ஒத்தமனம் | தம்பதிகள் இருவரும் ஏகசிந்தையுள்ளவர்கள் |
ஒ | பத்தா முயிரெழுத்து |
ஒடு | மூன்றாம் வேற்றுமையுறுபு. (தொல். சொல். 74.) |
ஒடுங்க | உவமவுருபு. (தொல். பொ. 290.) |
ஒப்ப | உவமவாய்பாடுகளுள் ஒன்று. (தொல். பொ. 291.) |
ஒன் | ஒருசாரியை. (தொல். எழுத். 180.) |
ஒன்ற | ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 286.) |
ஒன்றோ | எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836) |
ஒப்புரவா | சமாதானமாதல். (Chr.) |
ஒண்டிப்புலி | சைக்கோளப் பிச்சைக்காரன் |
ஒன்று | 1 |
ஒப்பனை | அலங்காரம் |
ஒன்றுபடு | ஒன்றுபடுதல் |
ஒரு முகமாய்ப் பேசுதல் | அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்தக் கருத்தைக் |
ஒரு கை பார்த்தல் | மோதிப்பார்த்தல் |
ஒற்றைக் காலில் நிற்றல் | விடாப்பிடியாக நிற்றல்/பிடிவாதமாக இருத்தல் |