ஒ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஒன்றுக்குப்போதல் | சலங்கழிக்கப்போதல். |
ஒன்றுமாறியொன்று | ஒன்றின்பின்னொன்று. |
ஒன்னலர் | பகைவர். |
ஒதிமத்தர் | பிரமர். |
ஒற்றைமருப்பினன் | பிள்ளையார் |
ஒட்டுக் குடித்தனம் | தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம். |
ஒட்டுக் கேள் | மற்றவர் பேசுவதை மறைந்து இருந்து கேட்டல். |
ஒட்டு மொத்தம் | தனித்தனியாக உள்ளவற்றைக் கேட்டு ஒன்று சேர்ப்பது : யாவற்றையும் சேர்த்து ஒருங்குபடுத்துதல். |
ஒப்புக்குச்சப்பாணி | குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக் கொள்ளப்படும் செயல்படாத நபர். |
ஒப்பேற்று | இருப்பதைக் கொண்டு சரிக்கட்டு. |
ஒய்யாரி | கவர்ச்சியுடைய பெண். |
ஒருக்களித்து | பக்கவாட்டாகச் சாய்ந்திருப்பது. |
ஒருகாலும் | எந்தக் காலத்திலும். |
ஒரு மாதிரி | இயல்புக்கு மாறானது. |
ஒரேயடியாக | மிகவும் முழுமையாக. |
ஒற்றைக்காலில் நில் | பிடிவாதமாக இரு. |
ஒன்றுக்கிரு | ஒன்றுக்குப் போ : சிறுநீர் கழித்தல். |
ஒன்று விடாமல் | எதையும் விடாது. |
ஒலி | சத்தம், இரைச்சல் |
ஒழுக்கம் | சாத்திர முறைப்படி அல்லது குல முறைப்படி நடத்தல் |