ஒ - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒற்றைத்தாலி

தனித்தாலி.

ஒற்றையாழித்தேரோன்

சூரியன்.

ஒற்றையாழித்தேர்

சூரியன்றேர்.

ஒற்றையாழியான்

சூரியன்.

ஒற்றையிரட்டைபிடித்தல்

ஒரு விளையாட்டு.

ஒன்பான்

ஒன்பது.

ஒன்றப்பார்த்தல்

அடுக்கப்பார்த்தல்.

ஒன்றன்பால்

ஒருமைப்பால்.

ஒன்றாதவன்

பகைவன்.

ஒன்றாய்

ஒருமிக்க.

ஒன்றார்

பகைவர்.

ஒன்றாலொன்றும்

யாதொன்றும்.

ஒன்றிக்காரன்

சமுசாரமில்லாதவன்.

ஒன்றிப்பு

ஒருமிப்பு.

ஒன்றுகட்டுதல்

சரிப்படுத்தல்.

ஒன்றுகற்றவன்

சிலகற்றவன்.

ஒன்றுகுடி

ஒட்டுக்குடி.

ஒன்றுகூட்டு

உறவு,ஒருகூட்டு,கொண்டுகூட்டு.

ஒன்றுக்கற்றவன்

கூட்டற்றவன்.

ஒன்றுக்கிருத்தல்

சலம்விடுதல்.