ஒ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஒக்கொலை | அம்பர். |
ஒச்சித்தல் | வெட்கப்படுதல். |
ஒடிசில் | கவண். |
ஒடுக்கட்டி | கழலைக்கட்டி. |
ஒட்ட | அடியோடே |
ஒட்டகம் | ஒருமிருகம். |
ஒட்டச்சி | பூவழலை. |
ஒட்டத்தி | ஒட்டுத்துத்தி. |
ஒட்டி | ஒட்டொடிப்பூடு, ஒருமீன். |
ஒட்டிக்கிரட்டி | ஒன்றுக்கிரண்டு பங்கு. |
ஒட்டுத்துத்தி | ஒருதுத்தி. |
ஒட்டொட்டி | ஒருசெடி. ஒட்டங்காய்ப்புல். |
ஒண்டன் | ஆணரி, நரி. |
ஒதி | உதயமரம். |
ஒதுப்புறம் | ஒதுக்கிடம். |
ஒத்தாசை | உதவி. |
ஒத்தாப்பு | ஒதுக்கு, குடில். |
ஒத்திக்கை | உதவி, ஒத்திருக்கை. |
ஒம்மல் | ஓமல். |
ஒலுங்கு | கொசுகு. |