ஐ - வரிசை 5 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஐசாபைசாவாய்

உண்டு இல்லை என இரண்டிலொன்றாய். இந்த வியாபாரம் ஐசாபைசாவாய்த தீரவேண்டும்.

ஐதுநொய்தாக

மிக்க இலேசாக. அனந்தன்பாலுங் கருடன்பாலு மைது நொய்தக வைத்து (திவ். பெரியாழ். 5, 4, 8)

ஐங்கணை-மன்மதனின் அம்புகள்

தாமரை மலர்
அசோக மலர்
குவளை மலர்
மாம் பூ
முல்லை மலர்

ஐசுவரியம்

அரசாட்சி
மக்கள்
சுற்றம்
பொன்
மணி
நெல்
வாகனம்
அடிமை செய்யும் ஆள்

ஐந்தெழுத்து





ஐந்தெழுத்து மந்திரம்

நமசிவாய

ஐம்பால்

ஆண் பால்
பெண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்

ஐம்புலத்தார்

தென் புலத்தவராகிய பிதுரர்
தெய்வம்
விருந்து
சுற்றத்தார்
தான்

ஐம்பெருங்குழு அரசர்க்குரிய கூட்டத்தார்

அமைச்சர்
புரோகிதர்
படைத் தலைவர்
தூதுவர்
சாரணர்

ஐம்பெருங்காப்பியம்

சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டல கேசி

ஐம்பொறி

மெய்
வாய்
கண்
மூக்கு
செவி

ஐந்தொழில்கள்

படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்

ஐவகை ஒழுக்கம்

கொல்லாமை
களவு செய்யாமை
காமவெறியின்மை
பொய்யாமை
கள்ளுண்ணாமை

ஐயா

மூத்தோர், பெரியோர், மதிப்புக்குரியோர் ஆகியோரை விளிக்கும் ஆண்பாற்சொல்.தந்தையையும் இறைவனையும் அழைப்பதற்கு இச்சொல் மிகவும் உகந்தது. அய்யா என்றும் அய்யன் அல்லது ஐயன் என்றும் பயன்படுத்துவர்.

ஐம்முக முழவம்

பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.