ஐ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஐம்புலத்தடங்கான் | கடவுள். |
ஐம்புலநுகர்ச்சி | பஞ்சேந்திரியாநுபவம். |
ஐம்புலம்வென்றோர் | முனிவர். |
ஐம்புலவிடையன் | இல்வாழ்வான். |
ஐம்புலன்விழையான் | துறவி. |
ஐம்புலன்வென்றோன் | அருகன், பஞ்சபட்சிப் பாஷாணம். |
ஐம்பூதம் | பஞ்சபூதம். |
ஐம்பூதம் | நிலம் |
ஐம்பூதலிங்கம் | பஞ்சபூதலிங்கம். |
ஐம்பூதியம் | பஞ்சபூதியம். |
ஐம்பொறியடக்கான் | இல்வாழ்வான். |
ஐம்பொறியடக்கி | துறவி. |
ஐம்முகப்பிரமன் | பூருவபிரமன். |
ஐயக்கண்சூலை | ஒருநோய். |
ஐயக்கிளவி | ஐயச்சொல். |
ஐயநாடி | சிலேட்டுமநாடி. |
ஐயவதிசயம் | ஒரலங்காரம். |
ஐயனார்கொடி | கோழிக்கொடி. |
ஐயாகோ | ஐயகோ. |
ஐயாயிரம் | ஓரெண். |