ஐ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஐஞ்ஞூறு | ஓரெண். |
ஐந்தார் | பனை. |
ஐந்து | ஓரெண். |
ஐந்தை | சிறுகடுகு. |
ஐமிச்சம் | அச்சம், ஐயம். |
ஐமுகி | காட்டாமணக்கு, சிவன். |
ஐயங்கன் | ஒருபேய். |
ஐயங்காய்ச்சி | ஒரு தேவதை, ஒருநோய். |
ஐயவி | கடுகு. |
ஐயானனம் | சிங்கம். |
ஐந்தருநாதன் | இந்திரன் |
ஐப்பசி | துலை ( 30 ) (18 oct) |
ஐஸ் கிரிம் | பனிக்குழைவு |
ஐய | அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23). |
ஐயகோ | இரக்கம் துக்கங்களின் குறிப்பு. ஐயகோவென் றலம்வருவாள் (வெங்கைகோ. 246). |
ஐயையோ | இரக்கக்குறிப்பு. |
ஐயோ | அதிசயக்குறிப்பு. (சூடா.) |
ஐக்காரிகன் | திருடன். |
ஐங்கணைக்கிழவன் | மன்மதன். |
ஐங்காயதயிலம் | பிண்டதயிலம். |