ஏ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏற்குமட்கலம் | கடிஞை. |
ஏற்கென | முன்னே. |
ஏற்போர் | இரப்போர். |
ஏறக்குறைச்சல் | ஏற்றத்தாழ்ச்சி. |
ஏற்றக்கோல் | ஏற்றக்கழி |
ஏற்றபடி | இசைந்தபடி,தக்கவாறு |
ஏற்றமரம் | துலா. |
ஏற்மொழி | புகழ்மொழி. |
ஏற்றரவு | முகனை. |
ஏற்றார் | பகைவர். |
ஏற்றுப்பனை | ஆண்பனை. |
ஏற்றுவாகனன் | சிவன். |
ஏனப்படம் | பன்றிமுகக்கடகு. |
ஏனைய | ஒழிந்தன. |
ஏற்றுக்கொள்ளுதல் | அங்கீரித்துக் கொள்ளுதல் |
ஏகமனாதாய் | ஒருமனதாய் |
ஏகோபித்து | ஒன்றுபட்டு |
ஏகமனதாய் | ஒருமனதாய் |
ஏககுண்டலன் | ஒற்றைக்குழையை யணிந்த பலராமன் |
ஏகதந்தன் | யானை முகக்கடவுள் |