ஏ - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏழைக்குறும்பு

வறுமையைக், காட்டிமோசஞ்செய்கை.

ஏழைத்தனம்

எளிமை.

ஏழ்ச்சி

எழுச்சி.

ஏழ்பரியோன்

சூரியன்.

ஏழ்பவம்

ஏழ்பிறப்பு.

ஏற

அதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு.
உயர. அந்தர மாறா... ஏறபறக்கெனிற் பறந்திடும் (சீவக. 2156)
முழுவதும். என்னுடையிருளை யேறத் துரந்தும் (திருவாச. 2, 6)
முற்பட. மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும் (சீவக. 1932, உரை)

ஏறக்குறைய

முன்பின்னாக
சுமார்

ஏறாங்கடைசி

அறமுடிவு.

ஏறிட்டுப்பார்த்தல்

உற்றுப்பார்த்தல்.

ஏறுகடை

முடிவானகடை.

ஏறுகுதிரை

ஏறுங்குதிரை.

ஏறுசலாகை

கைமரங்கோக்குஞ், சலாகை.

ஏறுதுறை

துறைமுகம்.

ஏறுநெற்றி

அகன்றநெற்றி.

ஏறுபொழுது

இளநேரம்.

ஏறுமாறு

குழப்பம்.

ஏறுவட்டம்

ஏறினவட்டம்.

ஏறுவால்

நீண்டவால்.

ஏறுர்ந்தோன்

சிவன்.

ஏற்கன்

முன்.