ஏ - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏர்ப்பூட்டு

ஏர்தொடுத்தல்.

ஏர்மங்கலப்பாட்டு

ஏரைப்பாடுவது.

ஏர்வாரம்

கமவாரம்.

ஏலக்காய்

ஒருவாசனைச்சாக்கு.

ஏலபிலன்

குபேரன்.

ஏலவார்

திருக்காஞ்சியிற் கோயில்கொண்ட அம்மையார்

ஏலாதி

ஒருநூல்.

ஏலாதிகடுகம்

ஒருமருந்து.

ஏலாபத்திரம்

தக்கோலம்.

ஏலாபரணி

பறங்கிச்சக்கை.

ஏலை

ஏலம்.

ஏவல்வாய்பாடு

ஏவற்சொல்.

ஏவற்பேய்

ஏறிவிவிட்டபேய்.

ஏவிவிடுதல்

ஏவுதல்.

ஏவம்விடை

ஏவல்விடை.

ஏவும்வினைமுதல்

ஏவுதற்கருத்தா.

ஏவுவான்

ஏவுகிறவன்.

ஏழத்தனை

ஏழுமடங்கு.

ஏழுநிலைமாடம்

ஏழடுக்குமாடம்.

ஏழேழு

எவ்வேழு, ஏழுக்கேழு.