ஏ - வரிசை 5 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகீயன்

தோழன்.

ஏகை

வயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையு நீங்கி (சிலப். 14, 181).
இரேகை
உமை

ஏக்கரவு

எக்கம்.

ஏக்கறல்

ஏக்கறுத்தல்.

ஏக்கிபோக்கி

ஒன்றுக்கு முதவாதவள்
எளியோர்

ஏக்கை

இகழ்ச்சி. (சங். அக.)

ஏங்குறல்

விசனப்படல்.

ஏசறவு

துக்கம்.

ஏசிடாவகம்

அதிமதுரம்.

ஏடகணி

ஓலையீர்க்கு.

ஏடுவாரல்

ஓலைவாருதல்.

ஏட்டிற்கல்வி

குருவில்லாக்கல்வி.

ஏட்டைப்பருவம்

வாலிபப்பருவம்.

ஏணகம்

மான்.

ஏணாசினம்

மான்றோல்.

ஏணிச்சீரு

ஒருபுல்.

ஏணிலையுடமை

கண்ணோட்டம்.

ஏதனம்

சுவாசம்விடல்/சுவாசமிடல்
மூச்சுவிடுதல்

ஏதுங்கெட்டவன்

இடமற்றவன்வீணன்.

ஏதுத்தாற்குறிப்பு

ஓரலங்காரம்.