ஏ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏகசிந்தை | ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11). |
ஏகசிருங்கன் | கிருஷ்ணன். |
ஏகதமன் | அநேகருள் ஒருவன். |
ஏகதுரீனன் | ஏகதுரன். |
ஏகதேசக்காரன் | மாறுபாடுள்ளவன். |
ஏகபதம் | ஒற்றைவழி. |
ஏகபதி | வழி. |
ஏகப்பத்திரிகை | வெண்டுளசி. |
ஏகபாதன் | சிவன். |
ஏகம்பட்டசசாரம் | ஒருவகை, யுலோகம். |
ஏகம்பன் | காஞ்சீபுரத்திற் கோயில் கொண்ட சிவபிரான். ஏத்தநின்ற வேகம்பன்றன்னை (தேவா. 1039, 7). |
ஏகலிங்கன் | குபேரன். |
ஏகவாரி | சிறுசுரிகை. |
ஏகாக்கம் | காக்கை. |
ஏகாங்கவாதம் | ஒருவகைவாதநோய். |
ஏகாதசம் | பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228). |
ஏகாத்தியம் | தனிச்செங்கோன்மை. |
ஏகாந்தஸ்தலம் | தனித்தவிடம். |
ஏகாரவல்லி | பலா |
ஏகாலியர் | வண்ணார்கள். |