ஏ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏரண்டம் | ஆமணக்கு. |
ஏராதது | ஏலாதது. |
ஏராளம் | மிகுதி. |
ஏர்பு | எழுச்சி, கிரககதி. |
ஏலாள் | ஏலா. |
ஏலி | கள். |
ஏலு | சங்கஞ்செடி. |
ஏல் | ஏலம் |
ஏழு | ஓரெண். |
ஏளிதம் | இகழ்ச்சி, எளிமை. |
ஏன | ஏனைய |
ஏகநாதன் | தனித்தலைவன் |
ஏகன் | ஒருவன் |
ஏறுக்குமாறு | முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல். |
ஏகாங்கி | திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.) |
ஏகவசனம் | ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78). |
ஏகதேசம் | உத்தேசம் |
ஏதாகுதல் | ஏதாவது.(J.) |
ஏது | எது - உனக்கேதுவேணும், |
ஏவதும் | ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36). |