ஏ - வரிசை 18 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏகாதசிவிரதம் | ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு |
ஏகாதிபதி | சக்கரவர்த்தி |
ஏகாந்தசேவை | சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. (Loc.) |
ஏகாந்தநித்திரை | அமைதியான தூக்கம். |
ஏகாந்தம் | தனிமை |
ஏகாந்தவாதி | ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18) |
ஏகாந்தவாழ்வு | தனிவாழ்க்கை |
ஏகாம்பரநாதர் | காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் |
ஏகாம்பரர் | ஏகாம்பரநாதர் |
ஏகாம்பரம் | ஒருமாவின்கீழ்ச் சிவன் கோயில்கொண்டுள்ள காஞ்சீபுரம். தொல்லுவகுபுகழ் காசியேகாம்பரம். (அறப். சத. 59) |
ஏகாயம் | ஏகாசம். தோலுடையாடை யேகாயமிட்டு (தேவா. 159, 4) |
ஏகாயனர் | மாத்துவர் |
ஏகாலத்தி | ஏகாலாத்தியம் |
ஏகாலாத்தியம் | பூசையில் சுவாமிக்குமுன் சுற்றும் ஒற்றைச்சுடர்த் தீபம். (பரத. ஒழிபி. 41, உரை.) |
ஏகாலி | வண்ணான். (பிங்.) |
ஏகாவல்லி | ஏகாவலி |
ஏகாவலி | ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500, புதுப்.) |
ஏகான்மவாதம் | பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.) |
ஏகி | கைம்பெண். (W.) |
ஏகீபாவம் | ஒன்றுபடுகை |