ஏ - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏர்பூட்டு | ஏரில் மாடுகட்டுதல். ஏர்பூட்டினல்லது (ஏரெழு. 17) |
ஏரடி | உழுதல் |
ஏரோட்டு | உழு |
ஏலங்கூறு | கேட்கப்பட்ட ஏலவிலையைப் பலரறியக்கூவுதல் |
ஏலங்கோள் | ஏலவிலையை ஏற்றி அல்லது குறைத்துக்கேட்டல் |
ஏவங்கேள் | இடைப்புகுந்து விசாரணை செய்தல். இராசா செய்ததற்கு ஏவங்கேட்பவரார்௯ (W.) |
ஏவல்கேள் | ஏவியபணி செய்தல் |
ஏவல்கொள் | வேலை வாங்குதல் |
ஏவு | கட்டளையிடுதல் |
ஏவுண்ணு | அம்பு பாயப் படுதல். பகழியி னேவுண்டு (இறை. 6, 64) |
ஏழரைகழி | கொடிய ஏழரையாண்டுச்சனி நீங்குதல். (W.) |
ஏழைமைகாட்டு | கோழைத்தனமாதல். (W.) |
ஏற்கநட | ஒழுங்காய் நடத்தல். (W.) |
ஏற்படு | உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது |
ஏற்படுத்து | உண்டுபண்ணுதல். அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன். |
ஏற்றம்போடு | துலாமரம் அமைத்தல் |
ஏற்றியிறக்கு | திருஷ்டிகழிக்குங் சடங்குநிகழுத்துதல் |
ஏந்தல் | கையேந்துகை |
ஏற்றுக்கொண்டுவா | ஒருவனைத் தாங்க வருதல் |
ஏற்றெழு | மயக்கந்துயில்களினின்றும் எழுதல். மெய்யறிந் தேற்றெழுவேனாயின் (கலித். 37.) |