ஏறுங்கூறுமாய் | தாறுமாறாய். (Loc.) |
ஏட்டுச்சுரைக்காய் | அனுபவமில்லாத நூல் படிப்பு நடைமுறைக்குப் பயன்படாத அறிவு |
ஏப்பம்பறி | ஏப்பம்விடு |
ஏப்பம்விடுதல் | தேக்கெறிதல் |
ஏப்பமிடுதல் | ஏப்பம்விடு |
ஏம்பலித்தல் | அவாக்கொள்ளுதல். நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு (தேவா. 1040, 8) |
ஏம்புதல் | களித்தல். மள்ள ரேம்பலோ டார்க்கு மோதை (கந்தபு. ஆற்று. 33) வருந்துதல். மத்திகை தாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12) மனங்கலங்குதல். (Loc.) |
ஏமருதல் | காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448) களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24) |
ஏமாத்தல் | அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306) ஆசைப்படுதல். அருந்தேமாந்த நெஞ்சம் (புறநா. 101) இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8) கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575) செருக்குறுதல். இரங்கு நமக்கம் பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச. 21, 7) நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98) |
ஏமாந்துபோதல் | ஏமாறுதல் |
ஏமார்தல் | மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49) பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660) |
ஏமாற்றுதல் | வஞ்சித்தல். மகனுத்தியினா லவரை யேமாற்ற (இராமநா. உயுத்த. 57) ஏமஞ்செய்தல். மாற்றேமாற்றலிலையே (பரிபா. 4, 53) |
ஏழு கன்னி | பிராம்மி மாகேஸ்வரி கவுமாரி வைஷ்ணவி வாராகி இந்திராணி சாமுண்டி |
ஏமாறு | மோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622) |
ஏமிலாந்து | திகைத்து நிற்றல் மனந்தடுமாறுதல் |
ஏமுறு | மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147) தன்மை திரிதல். ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ. 109) வருத்தமுறுதல். ஏமுறு கிளவி (தொல். பொ. 146) பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873) மயக்கமுறுதல். ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163) காப்படைதல். எஞ்சிய பொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97) பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி. 704) |
ஏய் | பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3) தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374) ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5, 1, 8) எதிர்ப்படுதல். போயினசின்னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந். ஐம். 11) பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77) ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17) வஞ்சித்தல் |
ஏய்ப்புக்காட்டு | நயவஞ்சகஞ் செய்தல் |
ஏர் | எழுதல். பனிக்கடல் பருகிவலனேர்பு (முல்லைப். 4) ஒத்தல். முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2) |
ஏர்கட்டு | உழுபடையில் உழவுமாட்டைப்பூட்டி உழத்தொடங்குதல். நல்ல அந்தியேர் கட்டுகிற நேரம். |