ஏ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏகவடம் | ஏகாவலி. பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350, 7). |
ஏகவல்லி | ஏகாவலி. (பெருங். உஞ்சைக். 46, 211.) |
ஏகவாசம் | தனிமையாயிருக்கை |
ஏகவாணை | பொதுவற ஆளுகை. ஏகவாணை வெண்குடை (சீவக. 141.) |
ஏகவாரம் | ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு. |
ஏகவிடுகொடி | ஏகாவலி. ஏகவிடுகொடி யெழிற்றோ ளெழுதி (பெருங். உஞ்சைக். 34, 201). |
ஏகவீரன் | தனிவீரன். (திவ். திருவிருத். 13, வ்யா.) |
ஏகவீரியன் | வீரபத்திரன். (பிங்.) |
ஏகவெளி | பெருவெளி |
ஏகவேணி | ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.) |
ஏகாக்கிரசித்தம் | ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8). |
ஏகாக்கிரதை | ஒன்றிலே மனம் பதிந்திருக்கை |
ஏகாகம் | இறந்தவர்க்குப் பதினோராநாளிற்செய்யுங் கிரியை |
ஏகாகி | தனித்திருப்போன் |
ஏகாங்கநமஸ்காரம் | தலைவணங்கிச் செய்யும் நமஸ்காரம். (சங். அக.) |
ஏகாசம் | உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257, 3). |
ஏகாட்சரம் | நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று. |
ஏகாட்சரி | ஓரெழுத்தாலாய மந்திரம். |
ஏகாட்சி | ஒற்றைக்கண் +(ணன்,ணி) |
ஏகாண்டம் | முழுக்கூறு. ஏகாண்டமான தூண். |