ஏ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏகதேவன் | கடவுள் |
ஏகநாயகன் | ஏகநாதன். ஏகநாயகனை மானதன் பிரவிருத்தியாலுதவும் (பிரபோத. 28, 2). |
ஏகப்பசலி | ஒருபோக நிலம். |
ஏகப்பிரளயம் | பெருவெள்ளம் |
ஏகப்பிழை | முழுதும் வழு |
ஏகபத்திரிகை | வெண்டுளசி |
ஏகபத்தினிவிரதம் | ஏகதாரவிரதம் |
ஏகபாதம் | நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.) |
ஏகபாதர் | ஒற்றைத்தாளர் ஆகிய சிவமூரித்தம். |
ஏகபாவனை | ஒருமையாகப் பாவிக்கை |
ஏகபிங்கலன் | பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.) |
ஏகபிராணன் | ஓருயிர்போன்ற நட்பு |
ஏகபுத்திரன் | ஒரேமகன் |
ஏகபோகம் | தனக்கே உரிய அனுபவம் |
ஏகம் | ஒன்று. (திவா.) |
ஏகம்பட்சாரம் | உலோகவகை |
ஏகம்பம் | காஞ்சியிலுள்ள சிவதலம். ஏகம்பத்துறையீசன் (தேவா. 1033, 6). |
ஏகராசி | அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19). |
ஏகலபுச்சன் | பைத்தியக்காரன் |
ஏகவட்டம் | ஏகவடம்.இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5, 139). |