ஏ - வரிசை 11 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏக்கழுத்து

ஏக்கழுத்தம்
மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92).

ஏக்கர்

43, 560 சதுர அடிகொண்ட நிலவளவை

ஏக்கரா

ஏக்கர்

ஏக்கறவு

இச்சை
இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83)

ஏக்கன்போக்கன்

ஒன்றுக்குமுதவாதவன்

ஏககுடும்பம்

பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம்
அவர்கள் ஏககுடும்பமாக இருக்கிறார்கள்

ஏகசக்கரவர்த்தி

தனியாணை செலுத்துவோன்

ஏகசக்கராதிபத்தியம்

தனியரசாட்சி

ஏகசக்கராதிபதி

ஏகசக்கரவர்த்தி

ஏகசகடு

மொத்தம்
சராசரி

ஏகசுபாவம்

ஒரே தன்மை
ஒத்த தன்மை

ஏகத்துவம்

ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101).

ஏகத்தொகை

முழுத்தொகை

ஏகதண்டி

திரிதண்டி
ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.)

ஏகதார்

ஒரு தந்தியுடைய வாத்தியம்.

ஏகதாரவிரதன்

ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4, 2, 8.)

ஏகதாளம்

சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.)

ஏகதேசவறிவு

சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41, சிவஞா.)

ஏகதேசவுருவகம்

ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள், 24, உரை.)

ஏகதேசி

ஓரிடத்திருப்புடையது. இவ்வைங்கோசங்களில் ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்துநிற்கும் (சி. சி. 4, 23, சிவஞா.)