ஏ - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏழுமலை | முருகன் |
ஏறன் | சிவன் |
ஏரம்பன் | பிள்ளையார் |
ஏடாகூடம் | முறைதவறிய செயல். |
ஏட்டிக்குப் போட்டி | எதிர் மறுப்பு. |
ஏப்பம் விடுதல் | பொருளை அபகரித்தல். |
ஏமாளி | எளிதில் ஏமாறக்கூடியவர். |
ஏழாம் பொருத்தம் | இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற தன்மை : ஒருவர் மற்றவரோடு ஒத்துப்போகாத நிலை. |
ஏழை பாழை | ஏழை எளியவர். |
ஏற்ற இறக்கம் | உயர்த்துதலும் இறக்குதலும் : தொனி வேறுபாடு. |
ஏனோதானோ | உரிய கவனம் அல்லது பொறுப்பு இல்லாமை. |
ஏளனம் | அவமதிப்பு |
ஏல்வை | காலம் |
ஏழகம் | ஆடு |
ஏலம் | கூறுகை |
ஏற்று | தூக்குதல். உத்தரத்தையேற்றினான் |
ஏறத்தாழ | ஏறக்குறைய |
ஏன் | First suffix |
ஏக்கம் | விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30). |
ஏக்கழுத்தம் | தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5). |