ஏ - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏஏ

இகழ்ச்சிக்குறிப்பு

ஏகபாவம்

ஒத்த எண்ணம்

ஏகரூபன்

கடவுள்.

ஏகவஸ்து

கடவுள்.

ஏகாகாரம்

மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான்.
ஒரு படி. நேற்றுமுழுவதும் மழை ஏகாகாரமாகப்பெய்தது.

ஏகாதசிப்புராணம்

ஒருபுராணம்.

ஏகாதிபத்தியம்

தனியாசாட்சி

ஏகாம்பரன்

ஏகம்பன்
சிவன்

ஏகார்க்களம்

ஏர்பூட்டநாட்பார்க்கை
தீயநாளறிதற்குரிய சக்கரம். (விதான. பஞ்சாங். 28.)

ஏகோதகம்

நதி சங்கமம். (W.)
நதிசங்கம்

ஏசி

கிளி.

ஏடலகம்

அதிமதுரம்.

ஏடல்

கருத்து.

ஏட்டிக்குப்போட்டி

எதிருக்கெதிர், ஒவ்வாமை.

ஏணாப்பு

இறுமாப்பு.

ஏண்டாப்பு

இருமாப்பு.

ஏதுகரம்

வழிவகை.

ஏமசிங்கி

மிருதாரசிங்கி.

ஏமி

உடனிகழ்வான்.

ஏமின்கோலா

ஒருவகைமீன்.