எ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எண்ணிடல் | கணக்கிடல். |
எண்ணில்கண்ணுடையோன் | புத்தன்,கடவுள். |
எண்ணில்காலம் | அளவில்லாதகாலம். |
எண்ணுதல் | எண்ணல். |
எண்ணெய்ச்சாணை | ஒருவிதமான சாணைக்கல். |
எண்ணெய்ப்புல்லிடுதல் | நெசவு பாவுக்கெண்ணெயிடுதல். |
எண்ணெய்மணி | வெள்மட்டமணி. |
எண்ணெய்வாணிபன் | எண்ணெய்விற்போன். |
எண்படுதல் | அகப்படுதல். |
எண்மடங்கு | எட்டுத்தடவை. |
எண்மையவன் | இலேசானவன், எளியவன். |
எதிரதுநோக்கிய வெச்சவும்மை | எதிர்மறைச் சொல்லைக்காட்டி நிற்குமும்மை. |
எதிரதுபோற்றல் | ஒருவகையுத்தி. |
எதிராக | முன். |
எதிராப்பு | கழலாதபடி வைக்கிற ஆப்பு. |
எதிரிடைக்காரன் | விரோதஞ் செய்வோன். |
எதிரிடைமுறி | எதிரிடைச்சீட்டு. |
எதிருத்தரம் | மறுமொழி. |
எதிர்கட்சி | முன்பக்கம். |
எதிர்காலம் | வருகாலம். |