எ - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எட்டாக்கை | தூரம். |
எட்டிகம் | சிலந்தி, சீந்தில். |
எட்டிமரம் | கஞ்சிரைமரம். |
எட்டிவிரியன் | ஒருபாம்பு. |
எட்டேகால்லக்ஷணம் | அவலக்ஷணம். |
எட்பிரமாணம் | எள்ளளவு. |
எண்கணன் | பிரமன். |
எண்காற்புள் | சரபம். |
எண்குணன் | அருகன், கடவுள், சிவன். |
எண்கூட்டிப்பெருக்கல் | உழலல். |
எண்சாத்திரம் | கணிதம். |
எண்சிறப்புள்ளோன் | அருகன். |
எண்சுவடி | கணக்கேடு. |
எண்டிக்கு | எண்டிசை. |
எண்டிசை | எட்டுத்திக்கு. |
எண்டோளி | காளி, துர்க்கை. |
எண்ணக்குறிப்பு | நினைவு. |
எண்ணாதவன் | துணிந்தவன். |
எண்ணார் | பகைவர். |
எண்ணிக்கை | எச்சரிக்கை,எண், கணிப்பு, சங்கை, மதிப்பு. |