எ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எகுன்று | குன்றிக்கொடி. |
எக்கியோபவீதம் | பூண் நூல். |
எங்கே | எவ்விடம். |
எசமாட்டி | தலைவி. |
எசமானத்துவம் | தலைமை. |
எசமானி | எசமாட்டி, தலைவி. |
எசமானினி | தலைவி. |
எசல் | எசலாட்டம். |
எச்சுதேவன் | யாகதேவன். |
எச்சவாய் | குதம். |
எச்சவும்மை | எஞ்சியதைக் காட்டும்மை. |
எச்சிலன் | பிசுனன். |
எச்சிலார் | இழிஞர். |
எச்சிலூண் | உச்சிட்டவுணவு. |
எச்சில்வாய் | உச்சிட்டவாய். |
எச்சிற்கல்லை | எச்சிலிலை. |
எச்சிற்பருக்கை | சிந்திக்கிடக்குஞ்சோறு. |
எஞ்சியசொல்லினெய்தக்கூறல் | ஒருதந்திரயுத்தி. |
எஞ்சுதல் | எஞ்சல். |
எடாதஎடுப்பு | தொடங்காத தொடக்கம்பெரியகாரியம். |