எ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எலா | நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.) |
எற்றே | See எற்று. (பிங்.) |
எற்றோ | See எற்று. எற்றோமற் றெற்றோமற் றெற்று (தனிப்பா. i, 109, 49). |
என்னோ | See என்னே. |
எப்பேர்ப்பட்ட | எவ்வகையான |
எங்கள் | யாங்கள் |
எண்ணிறந்த | எண்ணமுடியாத. எண்ணிறந்த வமணர்களும் (தேவா. 575, 10). |
எவ்வளவு | எம்மட்டு |
எழிலிய | அழகுவாய்ந்த. எழிலிய செம்பொறியாகத்து (புறநா. 68, 5). |
எனைப்பல | எத்தனையோ பல |
எந்த | எந்தவெந்த வெஞ்சாயகம். கொடுத்தார் (பாரத. பதினெட். 30). |
என்னுங்காட்டில் | என்பதைக்காட்டிலும். (ஈடு.) |
என்றால் | என்று சொல்லின். |
என்றாலும் | என்று சொன்னாலும். |
எனின் | என்று சொல்லின். |
எனினும் | என்று சொல்லினும். |
எதிர்நோக்குநட்சத்திரம் | See எதிர்நாள். |
என் | இது ஒருவருடைய கூற்று, கருத்துரை என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு அவற்றின் பின் வரும்போது |
எத்தும் | எவ்வகையாலும். எத்துந் தமதுரை தேறிநின்றேனை (தஞ்சைவா. 26) |
எஃகுகோல் | பஞ்சுகொட்டும்வில். |