எ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எல்லோ | அதிசயவிரக்கச்சொல். |
எல்வை | காலம், நாள். |
எவண் | எவ்விடம் |
எவ் | எவை |
எவ்வாறு | எவ்வழி. |
எவ்விடம் | எந்தவிடம் |
எழுநா | அக்கினி, கொடுவேலி. |
எழுவரைக்கூடி | சவ்விரபாஷாணம். |
எழுவான் | கிழக்கு. |
எறும்பி | யானை. |
எறும்பு | பிபீலிகை |
எற்றை | என்று. |
என்றா | ஓரெண்ணிடைச்சொல். ஒப்பிற் புகழிற்பழியினென்றா (தொல். சொல். 73). |
என்னே | என்ன. |
எண்டோளன் | சிவன் |
எழினி | கடையெழு வள்ளல்களில் ஒருவன் |
எதேச்சை | தன்னுடைய விருப்பப்படி(தன்விருபபம்). |
எதேஷ்டம் | தேவைக்கு அதிகம். |
எதார்த்தம் | வெளிப்படை |
எண்பி | நிரூபணம் செய். |