எ - வரிசை 21 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எங்குத்தைக்கு | எவ்விடத்துக்கு |
எங்ஙன் | எங்ஙனம் |
எங்ஙனம் | எவ்வாறு |
எங்ஙனே | எங்ஙனம் |
எந்திரன் | இயந்திர மனிதன் |
எதா | எப்படி |
எதாசத்தி | கூடியவரை. பொருந்திய வெதாசத்தி யீந்தான் (மச்சபு. தீர்த்தயாத். 5) |
எதாப்பிரகாரம் | வழக்கம்போல்; எதாப்பிரகாரம் நடக்கட்டும் |
எதிர்முழி | நேருக்குநேராய் |
எதோள் | எவ்விடம் |
எதோளி | எதோள் |
எந்து | எப்படி |
எப்போதும் | எப்பொழுதும் |
எப்போதைக்கும் | எப்பொழுதும் |
எப்போழ்து | எப்பொழுது |
எம்பரும் | எவ்விடத்தும் |
எய்த | நன்றாக |
எவ்வது | எவ்விதம் |
என்னுக்கு | எதற்கு |
என்னும் | யாவும் |