எ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எத்தேசகாலமும் | எப்போழ்தும். |
எமநாகம் | அசமதாகம், ஊமத்தை. |
எமநாமம் | ஊமத்தை. |
எம்பர் | எவ்விடம். |
எம்புகம் | நிலக்கடம்பு. |
எம்மட்டு | எவ்வளவு. |
எம்மாத்திரம் | எவ்வளவு. |
எய்யாமை | அறியாமை. |
எரிகாசு | அகிற்கூட்டைந்தினொன்று. அஃது காசுக்கட்டி. |
எருது | இடபம் |
எருத்தம் | தரவு, பிடர். |
எருத்து | ஈற்றயல், பிடர். |
எருந்தி | இப்பி, எராமுட்டி. |
எருந்து | உரல், கிளிஞ்சில். |
எருமை | காரா. |
எலுமிச்சை | எலும்பிச்சை |
எலும்பி | ஒருமரம். |
எலும்பு | என்பு. |
எல்லரி | கைமணி. |
எல்லவர் | எல்லாரும். |