எ - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எழுந்திருத்தல் | எழுந்தருளுதல். |
எழுப்பில் | எற்றல். |
எழுவாயெழுஞ்சனி | மகநாள். |
எளிஞர் | எளியவர். |
எளிதரவு | எளிமைத்தனம். |
எளிது | சுலபம் |
எளிவரல் | எளிதாகவரல். |
எள்ள | ஓர் உவமவுருபு. எள்ளவிழைய... பயனிலையுவமம் (தொல். பொ. 289). |
எள்ளற்பாடு | இகழ்ச்சி. |
எள்ளிடை | எள்ளளவு. |
எள்ளுச்செவி | ஒருபூண்டு. |
எள்ளுண்டை | ஒரு சிற்றுண்டி. |
எள்ளுருண்டை | ஒரு சிற்றுண்டி. |
எள்ளோரை | எள்ளுச்சாதம். |
எறிசக்கரம் | எறியுஞ்சக்கரம். |
எரிச்சலூர்மலாடனார் | ஒருபுலவர், இவர்கடைச்சங்கக்காலத்துள்ளோர். |
எறிபடை | கைவிடுபடை. |
எறிமணி | சேமக்கலம். |
எறியால் | ஒருமீன். |
எறிவளையம் | சக்கராயுதம். |