எ - வரிசை 13 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எருமைக்கற்றாழை

ஒரு கற்றாழை.

எருமைக்காஞ்சொறி

ஒரு காஞ்சொறி.

எருமைக்கொற்றாள்

ஒருகொடி.

எருமைச்சுறா

ஒருமீன்.

எருமைத்தக்காளி

ஒருசெடி.

எருமைநாகு

எருமைப் பெண்கன்று.

எருமைநாக்கள்ளி

ஒருகள்ளி.

எருமைநாக்கி

ஒருமீன், சாணாக்கி.

எருமைநாக்கு

ஒருமீன்.

எருமைப்பாச்சோற்றி

ஒருபூண்டு.

எருமைப்பால்குடித்தவன்

மந்தன்.

எருமைமுல்லை

ஒருமுல்லை.

எருமையூர்தி

யமன்.

எருவராட்டி

காய்ந்த எரு.

எருவாரம்

எருச்செய்கைப்பங்கு.

எருவிடுவாசல்

குதம்.

எலித்திசை

வடமேற்றிசை.

எலித்துருமம்

தான்றி.

எலிப்பகை

பூனை

எலிப்பிடுக்கன்

ஒருபூடு.