எ - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எதிர்காற்று

நேர்காற்று.

எதிர்கோள்

எதிர்கொள்ளல்.

எதிர்ச்சீட்டு

எதிர்முறி.

எதிர்நோக்கு நட்சத்திரம்

எதிர்நாள்பக்கநாள்.

எதிர்ந்தோர்

பகைவர்.

எதிர்பாடு

நேரிடுதல்.

எதிர்முறி

கள்ளச்சீட்டு.

எதிர்வரல்

விரோதமாகவரல்.

எதிர்வழக்கு

எதிர்வியாச்சியம்.

எதிர்வாதி

பிரதிவாதி.

எதிர்வைத்தல்

சரிவைத்தல்.

எத்தினம்

எத்தனம்.

எத்துணை

எவ்வளவு.

எத்துவாதம்

அகடவிகடம்.

எந்திரகாரன்

சூத்திரக்காரன்.

எப்பிறப்பு

எம்மை.

எப்பொருட்குமிறைவன்

எல்லாவற்றிற்கு மதிபன், கடவுள்.

எப்பொழுதும்

எக்காலமும்.

எமார்

எமர்.

எம்பி

என் தம்பி, என்றம்பி