ஊ - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊற்றெடுத்தல்

ஊறலெழுதல்.

ஊனமானம்

உரோசாபிமானங்கள்.

ஊனான்

ஒருகொடி.

ஊனி

அமுக்கிராங்கிழங்கு.

ஊனுருக்கி

கபவியாதி.

ஊனொட்டி

உடும்பிறைச்சி.

ஊன்விற்போர்

இறைச்சிவிற்போர்.

ஊன்றுகால்

உதைகால்.

ஊன்றுகோல்

பற்றுக்கோல்.

ஊர்ஜிதம்

உறுதி(உறுதிப்படுத்தல்)

ஊனம்

(உறுப்புக்)குறைபாடு

ஊழ்கம்

தியானம்

ஊசிக்காது

சிறு ஒலியும் கேட்கும் காது.

ஊசித் தொண்டை

சிறிது சிறிதாக விழுங்கும் தொண்டை.

ஊர்க்கதை

வெளிவிவகாரம்.

ஊர்ப்பட்ட

ஏராளமான.

ஊர் மேய்தல்

பல இடங்களிலும் தேவையின்றித் திரிதல்.

ஊறு

தீண்டுகை

ஊரல்

கிளிஞ்சில்

ஊங்கு

மிகுதி. (சூடா.)
மேம்பட்டது. கல்வியினூங்கில்லை (நீதிநெறி. 2). உவ்விடம். ஊறு மாகட மாவுற வூங்கெலாம் (கம்பரா. வரக்காட். 60).முன்பு. உணரா வூங்கே (குறுந். 297).