ஊ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊத்தைச்சீலை

அழுக்குச்சீலை, சூதகச்சீலை.

ஊத்தைப்பாண்டம்

அழுக்குப்பாத்திரம், உடம்பு.

ஊமணைச்சட்டி

நன்றாய் வேகாத மட்சட்டி.

ஊமணச்சி

அழகற்றவள்.

ஊமணையன்

அவலட்சணன்.

ஊமற்கரி

பனங்கொட்டையின்கரி.

ஊமண்

ஊமை, கூகை.

ஊமைதேங்காய்

குலுங்காத தேங்காய்.

ஊமைவிளையாட்டு

ஒரு விளையாட்டு.

ஊரண்டினார்

கள்ளி.

ஊரல்பதம்

பச்சைப்பதம்.

ஊரவியன்

வைசியன்.

ஊரிலிகம்பலை

கலாதி.

ஊரீகிருதம்

அங்கீகரிக்கப்பட்டது.

ஊருகால்

சங்கு.

ஊருசன்

வைசியன்.

ஊருஸ்தபவாதம்

ஒருவகை வாதநோய்.

ஊர்கலிகம்பலை

கலாதி.

ஊர்கூடுதல்

ஊரவர்கள் திரளுதல்.

ஊர்கோலம் வருதல்

ஊர்வலம் வருதல்.