ஊ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஊடாட்டம்

பழக்கம்.

ஊடுசெல்லல்

ஊடுபோதல்.

ஊடுருவல்

தட்டுருவல்.

ஊடுவெளி

இடைவெளி

ஊடூடே

இடையிடையே
அப்போதைக்கப்போது
அடிக்கடி
இங்குமங்கும்

ஊட்டல்

ஊட்டுதல்.

ஊட்டுக்கன்று

பால்குடிக்குங்கன்று.

ஊட்டுக்குற்றி

மிடறு.

ஊஷ்மகம்

கோடைகாலம்.

ஊஷ்மாகமம்

கோடைகாலம்.

ஊதாரித்தனம்

அழிப்பு, வீண்செலவு.

ஊதிடுகொம்பு

கொம்பினாற்செய்த இசைக்குழல்.

ஊதியொடுக்கம்

சுவாசம்.

ஊதுகட்டி

சொக்கவெள்ளி.

ஊதுகரப்பன்

ஒரு கரப்பன்.

ஊதுகாமாலை

ஒருநோய்.

ஊதுகுழல்

ஒரு வாச்சியம்.

ஊதுகொம்பு

ஊதிடுகொம்பு.

ஊதுமாந்தம்

ஒருநோய்.

ஊத்தைக்குடியன்

ஒருபிசாசம்.