உ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உதடு | இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் மிருதுவான புறப்பகுதி |
உதயம் | தோன்றுதல், பிறத்தல் |
உதரவிதானம் | மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் இருப்பதும் நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருப்பதுமான தசை |
உதவாக்கரை | 1.எந்த விதப் பயனும் இல்லாதது 2.பயன் அற்ற நபர் |
உதவி | ஒருவர் நன்மை அடையும்படி பிறர் செய்யும் செயல், ஒருவருடைய வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்,ஒத்தாசை |
உதவித்தொகை | 1.ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது ஒரு தனியார் அமைப்பு குறிப்பிட்ட காலம் வரை வழங்கும் பணம் 2.(வெள்ளம் தீ போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு)நிவாரணமாக வழங்கும் பனம் |
உதவு | பயன்படுதல், உபயோகமாக இருத்தல் |
உதறல் | 1.(குளிர் ,பயம் முதலியவற்றால் ஏற்படும்) உடல் நடுக்கம் 2.(ஏற்படவிருக்கும் ஆபத்தை,தண்டனையை நினைக்கும்போது ஏற்படும்)பயம் |
உதறு | (குளிர் ,பயம் முதலியவற்றால் )நடுங்குதல் |
உதாசீனம் | புறக்கணிப்பு |
உதாரகுணம் | பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு, தயாளகுணம் |
உதாரசிந்தை | தருமம் செய்யும் எண்ணம், தாராள மனப்பான்மை |
உதாரணம் | see எடுத்துக்காட்டு |
உதி | தோன்றுதல் |
உதிர் | ஒன்றாகச் சேர்ந்திருப்பது அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பது பிரிந்து)கீழே விழுதல் |
உதிரப்போக்கு | இரத்தப்போக்கு,(காயம் போன்றவற்றால்) அதிக அளவிலான இரத்த வெளியேற்றம் |
உதிரம் | குருதி |
உதிரி | (ஒன்றோடு ஒன்று இணையாமல்)தனித்தனியாக இருப்பது |
உதிரிப்பாகம் | ஒரு இயந்திரத்தின் மாற்றக்கூடிய பகுதி |
உதை | (காலால் தரும்) பலத்த அடி |