உ - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உத்தரவாதம் | உறுதி |
உத்தரவு | ஆணை |
உத்தராயணம் | சூரியன் மகரரேகையிலிருந்து கடகரேகைக்குச் செல்லும் ஆறு மாத காலம் |
உத்தரி | 1.பிறத்தல் 2.(கஷ்டம் துன்பம் போன்றவற்றை)அனுபவித்தல் |
உத்தரீயம் | மேலாடை |
உத்தி | திறமையான வழிமுறை |
உத்தியோகம் | அலுவல் |
உத்திரட்டாதி | இருபத்தேழாவது நட்சத்திரத்தில் இருபத்தாறாவது |
உத்திரம் | உத்தரம் |
உத்திரவாதம் | உத்தரவாதம் |
உத்திரவு | உத்தரவு |
உத்திரவுப் பத்திரம் | உரிமம் |
உத்திராடம் | இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தொன்றாவது |
உத்தேசம் | குத்துமதிப்பு |
உத்தேசி | கருத்தில் கொள்ளுதல், எண்ணுதல் |
உத்வேகம் | உந்துதல், தூண்டுதல் |
உதட்டளவில் | (முழு மனத்துடன் இல்லாமல்) வெறும் வாய் வார்த்தையாக |
உதட்டுச்சாயம் | உதட்டுக்குப் நிறம் தருவதற்காகப் பெண்கள் பூசிக்கொள்ளும் அழகுச் சாதனம் |
உதட்டுப்பிளவு | (பிறவியிலேயே காணப்படும்) பிளவுபட்ட மேல் உதடு |
உதட்டைப் பிதுக்கு | உதட்டை வெளியே தள்ளுவதன்மூலம் 'இல்லை','தெரியாது' போன்ற பொருளை உணர்த்துதல் |